குமாரபாளையம் கிரைம் செய்திகள்

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

Update: 2023-08-08 13:00 GMT

குமாரபாளையம்  க்ரைம் செய்தி (பைல் படம்).

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

அனுமதி இல்லாமல்  மது விற்ற 4 பேர்  கைது

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற 4 பேர்  கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. டேவிட், சந்தியா தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அருவங்காடு மாதா கோயில் அருகே, வட்டமலை ஓட்டல், பஸ் ஸ்டாண்ட், காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் மது விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார் மதுரையை சேர்ந்த ராஜாங்கம், 58, குமாரபாளையத்தை சேர்ந்த இளங்கோ, 44, தன்ராஜ், 28, ஜானகிராம், 59, ஆகிய நான்கு பேரை  கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 55 மது பாட்டில்களை  பறிமுதல் செய்தனர்.

________________________________________________________________________________

கார் மோதி நிதி நிறுவன பணியாளர் படுகாயம்

திருச்செங்கோட்டைச்  சேர்ந்தவர் அன்பழகன், 39. நிதி நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, வேமன்காட்டுவலசு பிரிவு சாலை அருகே, தனது டூவீலரில் அமர்ந்தபடி மொபைலில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அதே வழியில் வேகமாக வந்த  கார் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், கார் ஓட்டுனர் கோவையை சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரை கைது செய்தனர்.

__________________________________________________________

டூவீலர் நிலைதடுமாறி விழுந்ததில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்

மேட்டூர் வட்டம், கொளத்தூரில் வசிப்பவர் விக்னேஷ், 23. கிளீனர். இவரது உறவினர் துக்க வீட்டிற்கு பெருந்துறை வந்து விட்டு, மீண்டும் கொளத்தூர் செல்ல வேண்டி, நேற்றுமுன்தினம் மாலை 04:30 மணியளவில்,  டூவீலரை விக்னேஷ் ஓட்ட, இவரது உறவினர் மற்றும் நண்பர்களான, மகேஷ், 27, ராஜேஷ் (எ) சின்னு, 19, இருவரையும் பின்னால் உட்கார வைத்துகொண்டு சேலம் கோவை புறவழிச்சாலையில் வந்து கொண்டு இருந்தார்.

பல்லக்காபாளையம், கிணத்துபாளையம் அருகே வந்த போது, நிலைதடுமாறி டூவீலர் கீழே விழுந்ததில் மூவரும் பலத்த காயமடைந்தனர். மூவரும் ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 08:30 மணியளவில் இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News