குமாரபாளையத்தில் இன்று கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே ராஜ கணபதி, சர்வ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெறவுள்ளது.;

Update: 2022-03-24 00:45 GMT

கும்பாபிஷேகம்  நடைபெறவுள்ள குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் ராஜகணபதி, சர்வசக்தி மாரியம்மன் கோயில்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் ராஜகணபதி, சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா,   நேற்று விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இன்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெறவுள்ளது.

நாளை மார்ச் 25, மற்றும் நாளை மறு நாள்  26ல் யாக சாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. மார்ச் 27ல் காலை 09:30 மணிக்கு,  மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News