குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்

குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2021-10-22 02:36 GMT

குமாரபாளையம் கோட்டைமேடு சாந்தபுரி நகரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் கோட்டைமேடு சாந்தபுரி நகரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அக். 22ல் காலை 07:00 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், அக். 23ல் முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 24ல் அதிகாலை 03:00 மணிக்கு மூன்றாம் கட்ட யாக சாலை பூஜை, அதிகாலை 04:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. பொதுமக்களுக்குப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

குமாரபாளையம் அபெக்ஸ் காலனி நாக சுந்தரகணபதி, நாகேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அக். 8ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அக். 15ல் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது. அக். 22ல் பவானி கூடுதுறை முக்கூடலில் இறுதி தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், கோபுர கலசம் வைத்தல், முதல் கால யாக சாலை பூஜை நடைபெறவுள்ளது. அக். 24ல் அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 07:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. பொதுமக்களுக்குப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

குமாரபாளையம் சேலம் சாலையில் மகா கணபதி, முனியப்பா சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அக். 22ல் மாலை 03:00 மணிக்கு பவானி கூடுதுறை முக்கூடலில் இறுதி தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், அக். 23ல் முதல் மற்றும் இரண்டாம் கட்ட யாக சாலை பூஜைகள், அக். 24ல் அதிகாலை 03:00 மணிக்கு மூன்றாம் கட்ட யாக சாலை பூஜைகள், அதிகாலை 04:15 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் சம காலத்தில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News