ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையத்தில் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.;
குமாரபாளையம் மணிமேகலை வீதியில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையத்தில் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம் மணிமேகலை வீதியில் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா ஆக. 7ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜை துவங்கியது. பெண்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து யாக சாலையில் வைக்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மகா பூர்ணஹூதி, வேத பாராயணம் நடத்தப்பட்டு, புனித திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது.
நேற்று காலை 10:30 மணியளவில் விமான கோபுர கலசத்திற்கும், ஸ்ரீசக்தி விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கபட்டது. யாகசாலை பூஜைகளை சண்முகராஜ் சாஸ்திரிகள் மற்றும் குழுவினர் நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். நகராட்சி கவுன்சிலர் வள்ளியம்மாள், முன்னாள் நகர தி.மு.க. செயலர் செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.