குமாரபாளையம் நாக சுந்தர கணபதி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
குமாரபாளையம் நாக சுந்தர கணபதி கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் நாக சுந்தர கணபதி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.
குமாரபாளையம் அபெக்ஸ் காலனி நாக சுந்தரகணபதி, நாகேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அக். 8ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அக். 15ல் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் பவானி கூடுதுறை முக்கூடலில் இறுதி தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு கோபுர கலசம் வைத்தல், முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து, இன்று அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 7:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சேலம் சூரமங்கலம், வரசித்தி விநாயகர் திருக்கோயில் ஆஸ்தான குருத்துவம் சக்தி சரவண சிவம் குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.
கோவிலை குமாரபாளையம் ஸ்தபதிகள் அருட்செல்வன், விஸ்வபாரத், வான் நிலவன் ஆகியோர் கட்டுமான பணிகளை செய்திருந்தனர். ஆலய நிர்வாகிகள் ஆண்டாள் ராஜு, ஸ்ரீதரன் பவுண்டரி மாதேஸ்வரன், பத்மா டெக்ஸ்டைல்ஸ் தட்சிணாமூர்த்தி, ரவிசங்கர், சிவராம் கம்பெனி சண்முகம், வி.எஸ்.ஆர். டெக்ஸ் ராமநாதன், ஆவின் முன்னாள் மேலாளர் குமார், வேளாண்காட்டார் காம்ப்ளெக்ஸ் சசிமகிபாலன், எல்.ஏ.எஸ். கிருஷ்ணசாமி, உள்ளிட்ட பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.