குமாரபாளையம் இளைஞர் சாவில் சந்தேகம்: அரசு மருத்துவமனையில் குவிந்த 200 பேர்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இளைஞரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 200க்கும் மேற்பட்ட நண்பர்கள், உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-05 02:29 GMT

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் நண்பர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி குவிந்த நண்பர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கவுதம், 29. தண்ணீர் கேன் விநியோகம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர். திருமணம் ஆகாத இவர் நேற்று மாலை 02:00 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார்.

மாலை 06:00 மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. இவரது பெற்றோர், நண்பர்கள் முயற்சி செய்தும் பலனில்லை. இவரை நேற்று இரவு 08:00 மணியளவில் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து பார்த்தபோது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளார்.

இவரது பிரேதம் குமாரபாளையம் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூறினர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து பிரேதத்தை பார்த்தனர். நாளை (இன்று பிரேத பரிசோதனை செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இருப்பினும் அங்கிருந்து போக மனமில்லாமல் இரவு 10:00 மணிக்கு மேல் ஆகியும் ஜி.ஹெச்.ல் நண்பர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News