குமாரபாளையம் உலக சமாதான ஆலயத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் உலக சமாதான ஆலயத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-10-15 16:28 GMT

குமாரபாளையம் உலக சமாதான ஆலயத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் உலக சமாதான ஆலயத்தில் நவராத்திரி விழா கொண் டாடப்பட்டது.

குமாரபாளையம் உலக சமாதான ஆலயத்தில் வெள்ளி விழா ஆண்டு நவராத்திரி கொலு திருவிழா கொண்டாடப்பட்டது. நவராத்திரி கொலு  வைக்கப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. நேற்று எழுத்தாளர் ரமேஷ்குமாரின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. இன்று சர்வமும் சக்திமயம்  என்ற  தலைப்பில் திருப்பதி ராஜா சொற்பொழிவு, அக். 17ல் குடும்ப நிர்வாகத்தை சிறப்பாக செய்வது கணவனா? மனைவியா? எனும் தலைப்பில் பட்டிமன்றம், அக். 18ல் குமாரபாளையம் சம்பூர்ண நாட்டியாலயா மாணவியரின் நடன நிகழ்ச்சி, அக். 19ல் பத்தியின் இலக்கணம் எனும் தலைப்பில் சொற்பொழிவு, அக். 20ல் மெய்ஞான ஆசிரியை சாந்தி தலைமையில் குத்துவிளக்கு பூஜை, அக். 21ல் சரணாகதி தத்துவம் எனும் தலைப்பில் சுப்ரமணி சொற்பொழிவு, அக். 22ல் யோகா பயிற்சியின் பலன்கள் எனும் தலைப்பில் டாக்டர் நாகராஜன் சொற்பொழிவு, அக். 23ல் ஆரோக்கியமும் உணவும் எனும் தலைப்பில் டாக்டர் தண்டபாணி சொற்பொழிவு, சென்னை சில்க்ஸ் தொழிலதிபர் விநாயகம் மீனாட்சியின் குருமகான் வாழ்த்துரை எனும் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை உலக சமாதான ஆலய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

நவராத்திரி விழா குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:-

நவராத்திரி பண்டிகை உலக நலத்துக்காக, தன்னை நம்பும் பக்தர்களுக்காக ஸ்ரீமஹாதேவி பிரசன்னாமாகி மகிஷாசுரவதம் நடத்தி, தன் குழந்தைகளை எப்படியும் காப்பாற்றுவேன் என்று பறைசாற்றும் நாளே விஜயதசமி நந்நாளாகும். நம் தாய் ஆதிபராசக்தியே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவிகளாக ரூபம் கொண்டு வாழத் தேவையான ஐஸ்வர்யம், ஞானம், வீரம் போன்றவற்றை அருள்கிறாள். அன்பின் சொரூபமான அவள் நம்மிடம் எதிபார்ப்பது ‘ஆத்ம சரணாகதி' என்ற தூய அன்பை மட்டுமே.

நவராத்திரி கொலுவில் இடம்பெறும் பிரமாண்டமான மலைகள், பலவகையான பாதாள குகைகள், நிறைய நீர்வீழ்ச்சிகளுடனான ஆறுகள், எரிமலை நெருப்பு, ஹோமகுண்ட அக்னியுடனான புகைமண்டலம், பாற்கடலில் மகாவிஷ்ணு, தியானசக்தி அதிர்வுகளுடன் சமுத்ரம், பிரமீடு குகை சப்தங்கள், புயல் மற்றும் தென்றல் காற்று சக்தி, பலவித மிருகங்கள் பறவைகள் சத்தத்துடனான சந்தனகாடு, ஐஸ்வர்யலஷ்மி குகை, மஹாகாளியின் ராட்ஷசசம்ஹார மஹிஷாசுரமர்த்தினிக் கோலம், சம்ஹாரகோலம், மலைகுகைகள், ஆற்று ஊற்றுக்கள், ருத்திராட்ச மரங்கள், மற்றும் பலவித அதிசய சக்தி வாய்ந்த தெய்வீகப் பொருட்களுடன் பிரபஞ்சசக்தியை கொணர்ந்து; வீட்டு கொலுவில் வைத்து பூஜிப்பதால் அம்பாளின் அருளை பெறலாம்.

இந்த மாபெரும் பிரபஞ்ச சக்தியும் மற்றும் நம் ஆதார சக்தியான ஸ்ரீமஹாமாயி விஷ்வரூபிணி தாயின் முழு அருளை இந்த நவராத்திரி நாட்களில் அனைவரும் பெறவேண்டும்.

ஒருவர் இந்த நவராத்திரியில் தன் வீட்டிலேயே மாபெரும் பிரபஞ்ச சக்தியையும் ஐம்பூத சக்திகளையும் தருவித்து தெய்வீகசக்தியை நிலைப்பெறச் செய்து, ஆனந்தமாக வாழ நினைத்தால் நவராத்திரி பூஜையை மேற்கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News