வீட்டில் நூலகம் அமைத்த குமாரபாளையம் மாணவர் பேச்சு போட்டியில் வெற்றி

குமாரபாளையத்தில் வீட்டில் நூலகம் அமைத்த மாணவர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றார்.

Update: 2022-08-05 16:30 GMT

வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துடன் மாணவன் இளவரசன்.

75வது சுதந்திரதின விழாவையொட்டி நாமக்கல்லில் ஆகஸ்டு 8ல் பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் போட்டி பள்ளிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குமாரபாளையம் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் இளவரசன் முதல் பரிசு பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். ஈரோட்டில் புத்தக திருவிழா நடத்தி வரும் மக்கள் சிந்தனை பேரவை கொள்கை முழக்கமான வீட்டிற்கு ஒரு நூலகம் என்பதன்படி மாணவன் இளவரசன் தன் வீட்டில் சிறிய நூலகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள்.

Tags:    

Similar News