பள்ளி பரிமாற்ற திட்டத்தில் குமாரபாளையம் மாணவர்கள் ஆன்லைனில் கலந்துரையாடல்
பள்ளி பரிமாற்ற திட்டத்தில் ஆன்லைன் மூலம் குமாரபாளையம் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.;
பள்ளி பரிமாற்ற திட்டத்தில் ஆன்லைனில் குமாரபாளையம் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.
பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் படி, ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாணவ, மாணவர்களை அழைத்து சென்று, அங்குள்ள பள்ளியின் அமைப்புகள், செயல்பாடுகள், கற்பித்தல் முறை, சுற்றுப்புற சூழ்நிலைகள், அப்பகுதி தொழில் மேம்பாடு நிலவரம் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்து மாணவர்களின் பொதுநல அறிவை வளர்த்துக் கொள்ள உதவிடுவார்கள்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின்படி ஒவ்வொரு பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து வீடியோ கான்பிக்கப்பட்டு, ஒரு பள்ளியின் மாணவர்கள் மற்றொரு பள்ளி மாணவர்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாட செய்தனர்.
அதன்படி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி மாணவர்கள், வீ.மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுடனும், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளியினர், வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியினரிடமும், மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியினர், ஜே.கே.கே.ரங்கம்மாள் மேனிலைப்பள்ளியினரிடமும், அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியினர், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியினரிடமும், நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியினர், பல்லக்காபாளையம் அரசு மேனிலைப்பள்ளியினரிடமும் ஆன் லைன் மூலம் கலந்துரையாடினர். இதன் மூலம் புதிய அனுபவம் கிடைத்ததாக மாணாக்கர்கள் கூறினர்.