மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2022-06-28 12:00 GMT

சேலம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் இந்தியன் கராத்தே பயிற்சி மைய மாணவர்கள் மூன்றாம் பரிசு பெற்றமைக்கு பயிற்சியாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பாராட்டினர்.

சேலம் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 900 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு வயது, எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.

இதில் குமாரபாளையம் கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மைய மாணவர்கள் திருநம்பி, ரோஷன், ஆகியோர் கட்டா பிரிவில் 14 வயது பிரிவின் கீழ் பங்கேற்று மூன்றாம் பரிசு பெற்றனர். பயிற்சியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் சாதனை மாணவர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News