தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் குமாரபாளையம் மாணாவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை படைத்த குமாரபாளையம் மாணவர்களை நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் நேரில் பங்கேற்று பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
தேசிய அளவிலான சிலம்ப போட்டி கோவா மாநிலம், கோல்வா நகரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணியின் சார்பில் கலந்து கொண்ட பிரவீன் 18 வயது பிரிவிலும், தன்ராஜ் 19 வயது பிரிவிலும், அஜீத் 21 வயது பிரிவிலும், முதல் பரிசும், தங்கப்பதக்கமும், கேடயமும் பரிசாக பெற்றனர்.
சாதனை மாணவர்களை நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் நேரில் பங்கேற்று பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். நிர்வாகிகள் விஸ்வநாதன், அன்பரசு, ரவி, ராஜ்குமார், கோவிந்தசாமிநாதன், கதிரவன் சேகர் முருகன், சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். சிலம்ப பயிற்சியாளர் மோகன்குமார் கௌரவிக்கப்பட்டார்.