கராத்தே தேசிய அளவிலான போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-08-22 09:45 GMT

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஒகினாவா கோஜு ரியூ கராத்தே டூ அமைப்பினர் குமாரபாளையம் வட்டமலையை சேர்ந்த பயிற்சியாளர் மாதேஸ்வரன் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றனர்.

28க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். 6 வயது முதல் 12 வயது வரையிலான போட்டியில் மெர்விதா, சர்வேஸ், கருணாகரா முதல் பரிசும், திவேஷ், பூமிநாத், ஜஸ்னு 2ம் பரிசும், 15 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கான போட்டியில் ஜீவா, லோகேஷ், தர்சன் சண்டை பிரிவில் முதலிடமும், நாகவள்ளி, நாகலட்சுமி,திவ்யா கட்டா பிரிவில் முதலிடமும், கோகுல் என்ற மாணவர் பிளாக்பெல்ட் பிரிவில் முதலிடம் பெற்று பிளாக் பெல்ட் பெற்றார்.

இவர்களை பயிற்சியாளர் மாதேஸ்வரன், கத்தேரி ஊராட்சி மன்ற தலைவி தமிழ்செல்வி, நிர்வாகி சண்முகம், வார்டு உறுப்பினர் பாலு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினார்கள்.

Tags:    

Similar News