தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் குமாரபாளையம் மாணவிக்கு தங்க பதக்கம்
தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் குமாரபாளையம் மாணவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர்கள் வரதராஜ், ருக்மணி தம்பதியர். கூலித் தொழிலாளியான இவரது மகள் கணிகஸ்ரீ, 17. குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் இருந்ததால், பயற்சியாளர் மதிவாணனிடம் பயிற்சி பெற்றார். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று, 403 கிலோ பளு தூக்கி, முதல் பரிசு பெற்று தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.