தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவ, மாணவியர் சாதனை

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.;

Update: 2021-10-07 15:15 GMT

இன்டர்நேஷனல் கியோ குஷன் கராத்தே அமைப்பின் சார்பில் கரூரில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி அணியினர் பயிற்சியாளர் அர்ஜுனுடன் உள்ளனர்.

இன்டர்நேஷனல் கியோ குஷன் கராத்தே அமைப்பின் சார்பில் கரூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

குமாரபாளையம் சுந்தரம் காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி கராத்தே மாணவ, மாணவியர் 40 பேர் இந்த போட்டிகளில், இன்டர்நேஷனல் கியோ குஷன் கராத்தே அமைப்பின் தமிழக தலைமை பயிற்சியாளர் அர்ஜுன் தலைமையில் 7,10,13, 15, 20, 22, 25,30 உள்ளிட்ட பல்வேறு எடை பிரிவின் கீழ் பங்கேற்றனர்.

இதில் 26 பேர் வெற்றி பெற்று கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த வர்ஷினி, 16 சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார். வெற்றி பெற்ற சாதனையாளர்களை ஈரோடு டி.எஸ்.பி.சண்முகம், எஸ்.எஸ்.எம். பொறியியல், கலை கல்லூரி தாளாளர் மதிவாணன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.

Tags:    

Similar News