குமாரபாளையம்: மது அருந்தியதை பெற்றாேர் கண்டித்ததால் மகன் தற்கொலை
குமாரபாளையத்தில் தினமும் குடித்து விட்டு வந்த மகனை பெற்றோர் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.;
குமாரபாளையத்தில் தினமும் குடித்து விட்டு வந்த மகனை பெற்றோர் திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் மணிகண்டன், 28. எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வருவதை வழக்கமாக கொண்டவர் என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் திட்டுவது வழக்கம். நேற்று முன்தினம் குடித்து விட்டு வந்த போது, பெற்றோர் திட்டிவிட்டு மாடி அறையில் தூங்க சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை 1.30 மணிக்கு பாத்ரூம் செல்ல தந்தை திருநாவுக்கரசு கீழே வந்த போது, வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மணிகண்டனை உறவினர் உதவியுடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்