குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் மண் கொட்டும் பணி துவக்கம்

Flood News Today -குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க மண் கொட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-10-14 02:50 GMT

குமாரபாளையம் மணிமேகலை தெரு உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் செல்லாதிருக்க வேண்டி, தாழ்வான பகுதியில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.

Flood News Today -குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க மண் கொட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு அதிக நீர் வரத்து வந்துகொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நேற்று மதியம் 05:00 மணியளவில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவதால், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறும் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களை பாதுகாக்க பாதுகாப்பு மையங்கள் தாயார் நிலையில் உள்ளன. மேலும் மணிமேகலை தெரு உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் செல்லாதிருக்க வேண்டி, தாழ்வான பகுதியில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.

குமாரபாளையம் மணிமேகலை தெரு முதல் காவேரி நகர் எல்லை வரை காவிரி கரையோர பகுதிகள் ஆகும். அங்காளம்மன் கோவில் பகுதி, கலைமகள் வீதி, அண்ணா நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் காவிரி கரையில் உள்ளதால் அடிக்கடி வெள்ள நீர் புகுந்து பெறும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அதனால் காவிரி கரையோரமாக 2 கி.மீ. தொலைவுக்கு தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து பல அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் பல போராட்டங்கள் நடத்தினர். இதுவரை பலனில்லை. கரையோர பகுதி மக்களுக்கு பாதுகாப்பு மையங்களில் அரசியல் கட்சியினர் உணவு வழங்கி வந்தாலும், கடந்த முறை உணவு வாங்க வந்த பெண் ஒருவரை பார்த்து, நீ இப்போதானே வாங்கி சென்றாய்? என்று சொல்ல, பாதுகாப்பு மையத்தை விட்டு, காவிரியில் வெள்ளம் வடியாத நிலையில், ஆபத்தான சூழ்நிலையில் அவர் வசிக்கும் வீட்டிற்கு சென்று விட்டார். பலர் நேரில் சென்று அழைத்தும் வரவில்லை. இது போன்ற சம்பவங்கள் பலரையும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

ஒரு வேளை உணவு வழங்கி விட்டு, உணவு வாங்க வருபவர்களை ஏளனமாக பார்ப்பது சிலருக்கு பிடிக்காமல் உள்ளது. அதனை அந்தந்தக் கட்சியினர் போட்டோ எடுத்து சமூக வலைதளைங்களில் பதிவிடுவது பலருக்கும் உடன்பாடு இல்லாத நிலை உள்ளது. வேலைக்கு சென்ற இடத்தில் சற்று தாமதாகி விட்டால், உணவு வழங்குபவர்கள் குறிபிட்ட நேரத்தில் உணவு வழங்கி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் தாமதமாக வந்தவர் உணவு உன்ன முடியாமல் பசியுடன் மீண்டும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

பள்ளி, கல்லோரிகளுக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு கொடுத்து அனுப்ப முடிவதில்லை. அங்கேயே சாப்பிடும் வகையில் பாக்கு மட்டையில்தான் உணவு வழங்கப்படுகிறது. மதியம் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப உணவு வேண்டும் என்று கெட முடியாத நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பு மையங்களில் தங்குவது பெரிதல்ல. இது போன்ற பல சங்கடங்களை சமாளித்து இருக்கும் நிர்பந்தம் ஏற்படுவதுதான் வேதனையிலும் வேதனை. குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் உணவு வழங்கும் போது அவர்கள் கட்சி உறுப்பினர்கள் பார்த்து முன்னுரிமை கொடுக்கபடுகிறது. கடந்த மாதம் இதே போல் பாலக்கரை அண்ணா நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி போதுமக்ளுக்கு அறுதல் சொல்ல சென்ற போது அப்பகுதி மக்கள் கூறியதாவது:

அண்ணா, மூன்று வேளையும் உணவு வழங்குகிறோம் என்று கூறி சென்றனர். ஆனால், யாரும் வரவில்லை. காவிரி கரையோர பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால், மிக்சி கூட போட முடியாமல், உணவு தயாரிக்க முடியாமல் இருந்து வருகிறோம். நாங்கள் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், உணவு மறுக்கபடுகிறது. நீங்கள் ஏற்பாடு செய்து தாருங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதைக்கேட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி, இன்று இப்போது முதல் நான் உணவு வழங்குகிறேன் என்று உணவு வழங்க ஏற்பாடு செய்தார். உணவு வழங்குவதில் இப்படிப்பட்ட சம்பவங்களும் நடக்கிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News