குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கம் வெள்ள நிவாரண உதவி

குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.;

Update: 2023-12-07 17:10 GMT
குமாரபாளையம் சிறு குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வெள்ள நிவாரணத்திற்கு பொருட்கள் அனுப்பி  வைக்கப்பட்டது.

குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்னையில் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் கொட்டி தீர்த்த மழையால் அனைத்து பகுதி மக்களும் தங்கள் உடைமைகள் இழந்து, வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, உணவுக்கு கூட இயலாத நிலையில் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், உணவுக்கு வழி இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.

இது போன்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் தொடர்ந்து உதவி வருகிறார்கள். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் பிரபாகரன், வேலுமணி, மாதேஸ்வரன், சோமசுந்தரம், வடிவேலு, சீனிவாசன், அர்த்தநாரீஸ்வரர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News