குமாரபாளையம் செங்கோன்மை பொதுநல அமைப்பினரின் ஐம்பெரும் விழா

குமாரபாளையம் செங்கோன்மை பொதுநல அமைப்பினர் சார்பில் பாரதி விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-12-27 12:45 GMT

குமாரபாளையம் செங்கோன்மை சார்பில் நடைபெற்ற பாரதி விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழாவில் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவி.

குமாரபாளையம் செங்கோன்மை பொதுநல அமைப்பின் சார்பில் பாரதி பிறந்தநாள்விழா, கவிதை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் 16ஆண்டு விழா என ஐம்பெரும் விழா நிர்வாகி செந்தில்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிர்வாகி மணிகண்டன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

பல்வேறு போட்டிகளின் நடுவர்களாக நாமக்கல் சேகர், பூபதி, சுதந்திராதேவி, குணசேகரன், ரமேஷ் பங்கேற்று போட்டியாளர்களில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர் ரவி, பொதுநல ஆர்வலர் கலாவதி, விடியல் பிரகாஷ், வாஸ்து நிபுணர் துரைசாமி பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குப் பரிசுகளும், ஏழை மாணவ, மாணவியர்களுக்குக் கல்வி உதவி தொகையும், ஆதரவற்ற மையங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன. கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன். அனைவருக்கும் முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து கொடுக்கப்பட்டன.

நிர்வாகிகள் மெய்யப்பன், மதுக்குமார், சரவணன் கவுதம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News