குமாரபாளையம் பள்ளி மாணவர் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தேர்வு
குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.;
சதுரங்க போட்டியில் குமாரபாளையம் மாணவர் சையத் பாசித் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானார்.
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடந்தது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவின் கீழ் நடந்த போட்டியில், குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சையத் பாசித் பங்கேற்று விளையாடி, இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், பி.டி.ஏ.தலைவர் தம்பி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் வாழ்த்தினர்.
குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் பங்கேற்று போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்து, மரக்கன்றுகள் நட்டினர்.
பள்ளி மாணவர்களிடையே போதை வழக்கம் வராமல் தடுத்திட போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்தார்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி பேசும்போது
பள்ளிப்பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, ஹான்ஸ், போதை மாத்திரைகள், போதை ஊசிகள் போன்ற போதை பொருட்களை உபயோகப்படுத்தகூடாது. அவ்வாறு அதனை வற்புறுத்தி வாங்க சொல்லும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தாருங்கள் என்றார்.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு பயிற்சிக்கு தேவையான பந்துகள், வலைகள், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.