குமாரபாளையம் சந்தோசி அம்மன் கோவில் ரக்சாபந்தன் விழாவில் சிறப்பு யாகம்
குமாரபாளையம் சந்தோசி அம்மன் கோவிலில் ரக்சாபந்தன் விழாவையொட்டி சிறப்பு யாகம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.;
குமாரபாளையம் சந்தோசி அம்மன் கோவிலில் ரக்சாபந்தன் விழாவையொட்டி சிறப்பு யாகம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
வட நாட்டில் சந்தோசி அம்மன் கோவில்களில் ரக்சாபந்தன் விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குமாரபாளையம் நேதாஜி நகர் பகுதியில் உள்ள சந்தோசி அம்மன் கோவிலில், அம்மன் பிறந்த நாளையொட்டி, ரக்சாபந்தன் விழா நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வர, அலங்கரிக்கபட்ட ரதத்தில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்கார, ஆராதனைகள், சிறப்பு யாகங்கள் நடந்தது.பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இது குறித்து கோவில் நிர்வாகி சகிலா அம்மாள் கூறியதாவது:
வட நாடுகளில் சந்தோசி அம்மன் பிறந்த நாளையொட்டி, ரக்சாபந்தன் விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். சக்தி மிகுந்த அம்மனை குமாரபாளையத்தில் அமைத்து, தினமும் வழக்கமாக பூஜைகளும், விழாக்காலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகிறது. அனைவரும் எழல நலமும் வளமும் பெற, அம்மனின் பிறந்த நாளன்று சிறப்பு யாகங்கள் நடத்தபட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, நம் வீட்டில் ஒருவராக அம்மனின் கரங்களில் ரக்சாபந்தன் கயிறு கட்டப்பட்டது. அவர் நம் வீட்டின் ஒருவராக இருந்து நம்மை காத்தருள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.