குமாரபாளையம் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் தாலுக்கா செயலர் அருள் தலைமை வகிக்க, மாவட்ட பொது செயலர் ராமகிருஷ்ணன் பங்கேற்று துவக்கி வைத்தார்.
ஊபா சட்டத்தை திரும்ப பெற வேண்டும், இதில் கைது செய்த இந்திய அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நிர்வாகிகள் வக்கீல் கார்த்திகேயன், மாநில துணை தலைவர் செல்வராஜ், முனுசாமி, கந்தசாமி, கோமதி, மதிவேல் ஈஸ்வரி, பூங்கொடி, கலாமணி, கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.