குமாரபாளையம் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடக்க உத்தரவு
குமாரபாளையம் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.;
குமாரபாளையம் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக நகரின் அனைத்து பகுதியிலும் நகராட்சி நிர்வாகத்தினர் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து வந்தனர். போலீசார் சார்பிலும் அனைத்து பகுதியிலும் ஊரடங்கு குறித்தும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
நகரில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழக அரசு உத்திரவின் படி, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் வரும் பொதுமக்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளாமல், கனிவுடன் விசாரித்து கொரோனா நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்திரவிட்டனர். அதன்படி பொதுமக்களிடம் கனிவுடன் விசாரித்து, விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் சாலை, ஆனங்கூர் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் கடைகள் யாவும் அடைக்கப்பட்டு இருந்தது. ஓட்டல்கள், மருந்து கடைகள் மட்டும் திறந்து வைத்திருந்தனர். பொதுமக்கள் ஊரடங்கிற்கு பெருமளவில் ஆதரவு கொடுத்தனர் என அவர் தெரிவித்தார்.