தேசிய அளவிலான கபாடி போட்டிக்கு குமாரபாளையம் வீரர் தேர்வு
தேசிய அளவிலான கபாடி போட்டிக்கு குமாரபாளையம் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;
ஹரிகிருஷ்ணன், குமாரபாளையம்.
தேசிய அளவிலான 69வது சீனியர் ஆண்கள் கபாடி போட்டி ஹரியானா மாநிலத்தில் நேற்று முதல் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு அணியின் சார்பில் விளையாட குமாரபாளையத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை சேர்ந்த இவர் தமிழ்நாடு அணிக்காக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை பயிற்சியாளர் யுவராஜ் மற்றும் பலரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.