குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கோரி மகளிரணியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-11-19 11:45 GMT

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கோரி மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (இடம் : பள்ளிபாளையம் பிரிவு சாலை)

நாமக்கல் மேற்கு மாவட்டம், குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நகர மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கோரியும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகளிரணி செயலர் சித்ரா தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது. மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி அமைப்பாளர் மூகாம்பிகா ஆலோசனைபடியும், மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல் படியும் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தினை மாவட்ட பொருளாளர் நந்தகுமார் தொடங்கி வைத்தார்.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் விசாகா குழுக்கள் அமைக்க வேண்டும், பள்ளி தோறும் சமூக கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும், மகளிர் ஆணையமே, மாணவியரை காக்க தலையீடு, என்ற கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மகளிரணி நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா ஆகியோர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.

மாவட்ட துணை தலைவர் சிவகுமார், நகர செயலர் சரவணன், நிர்வாகிகள் பழனியம்மாள், தேன்மொழி, புஷ்பா, திருக்குறள் பங்கஜம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News