குமாரபாளையம் மக்கள் நீதி மய்ய கோரிக்கையை ஏற்று வடிகால் அமைக்கும் பணி துவக்கம்

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கை ஏற்று காந்திநகர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்தினர் துவக்கினர்.;

Update: 2022-01-06 15:30 GMT

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ஏற்று காந்திநகர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்தினர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கினர்.

குமாரபாளையம் பழைய வார்டு 12, புதிய வார்டு காந்திநகர் பகுதியில் அடிப்படை வசதியான வடிகால், தரமான சாலை ஆகியன இல்லாமல் இருந்தது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, உஷா மனு கொடுத்தனர். இந்த மனுவின் அடிப்படையில் நேற்று இந்த பகுதியில் பொக்லின் உதவியுடன் வடிகால் அமைக்கும் பணி துவங்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News