குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் அக். 26ம் தேதி மின் நிறுத்தம்
குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் அக். 26ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் அக். 26ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம், பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் அக். 26ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பள்ளிபாளையம் துணைமின் நிலைய பகுதிகளான பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப்பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி.காலனி, அண்ணா நகர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்காராயண்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 09:00 முதல் 02:00 வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் அக்.26.ல் காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு,கோட்டைமேடு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர்,கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லாரிகளில் சிக்கி துண்டாகும் மின் கம்பிகளால் மின் பணியாளர்கள் அவதி
லாரிகளில் சிக்கி துண்டாகும் மின் கம்பிகளால் குமாரபாளையம் மின் பணியாளர்கள் அவதிகுள்ளாகி வருகின்றனர்.
குமாரபாளையம் இடைப்பாடி சாலை, சேலம் சாலைகளில் மின் கம்பிகள் சில இடங்களில் தாழ்வாக உள்ளது. இதனால் கரும்பு லோடு லாரிகள், அனல் மின்நிலைய லாரிகள், உயரமாக அடுக்கப்பட்ட சரக்கு லாரிகள் வரும்போது, மின் கம்பிகள் சிக்கி அறுந்து விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்து அபயம் ஏற்படுவதுடன் மின் பணியாளர்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். புதைவட மின்பாதை அமைத்தும் இன்னும் சில இடங்களில் அவைகள் செயல்படாத நிலையில் உள்ளது.
பல கோடி மதிப்பில் புதைவட மின் கம்பிகள் அமைத்தும், இன்னும் செயல்படாததால் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் துவக்கப்பட்ட பணி என்பதால் கிடப்பில் போடப்பட்டதா? என பொதுமக்கள் கேட்டு வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், மின் கம்பி அடிக்கடி அறுந்து விழுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், எவ்வித பாரபட்சமின்றி புதைவட மின் கம்பிகள் வழியாக மின் இணைப்பு கொடுத்து, அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி, ஜவுளி உற்பத்தி பாதிப்பு
குமாரபாளையம் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதுடன் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது குறித்து வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் வருகின்றனர். நகரின் பிரதான தொழிலான ஜவுளி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வருமானமிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தினர், மின்வாரிய உயர் அதிகாரிகள், பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை செய்து கொள்ளும் படி அறிவுறுத்த வேண்டும், மேலும் மின் விநியோக நாட்களில் பராமரிப்பு பணிகளை காலை 06:00 மணிக்கு தொடங்கி செய்து கொள்ள உத்திரவிட வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் நினைத்த நேரத்தில் மின் தடை ஏற்படுத்துவதால் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.