குமாரபாளையம், பள்ளிபாளையம், உப்புபாளையம் பகுதிகளில் டிசம்பர் 23 இல் மின்தடை..

குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் உப்புபாளையம் பகுதிகளில் டிசம்பர் 23 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-21 16:15 GMT

தமிழகத்தில் மின்சார வாரியம் சார்பில், ஒவ்வொரு துணை மின்நிலையப் பகுதிகளிலும் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது, அந்தப் பணிகள் முடியும் வரை துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 23 ஆம் தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் பகுதிகள்:

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் டிசம்பர் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யாநகர், வேமன் காட்டுவலசு, கோட்டைமேடு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர்,கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் அன்றையதினம் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

பள்ளிபாளையம் பகுதிகள்:

பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் டிசம்பர் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், வெடியரசம்பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், காடச்ச நல்லூர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ், ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றையதினம் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

உப்புபாளையம் பகுதிகள்:

உப்புபாளையம் துணை மின் நிலையத்தில் டிசம்பர் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிது. இதனால், மோடமங்கலம், வால்ராசம்பாளையம், அம்மன் கோவில், நவக்காடு, உப்புபாளையம், ஆத்திகாட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் அன்றையதினம் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News