ஆள் இல்லா காரில் 150 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்த போலீசார்

குமாரபாளையம் அருகே ஆள் இல்லா காரில் 150 கிலோ புகையிலை பொருட்களை, போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-01-19 10:30 GMT

ஆள் இல்லா காரில் 150 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்த போலீசார்

குமாரபாளையம் அருகே ஆள் இல்லா காரில் 150 கிலோ புகையிலை பொருட்களை, போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர்.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் உள்ள எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி அருகே உள்ள சாலையில், நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மாருதி ஸ்விப்ட் டிசைர் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது பற்றி தகவலறிந்த அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட குமாரபாளையம் போலீசார், கார் ஓட்டுனரை தேடி கிடைக்கவில்லை என்பதால், காரை திறத்து பார்த்ததில், அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள், கூல் லிப் உள்ளிட்ட 150 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. 150 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 92 ஆயிரத்து 500 என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News