பணப்பையை எடுத்து கொடுத்த வாட்ச்மேனுக்கு குவியும் பாராட்டு
குமாரபாளையத்தில் பணப்பையை எடுத்து கொடுத்த வாட்ச்மேனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பணப்பையை எடுத்து கொடுத்த வாட்ச்மேனுக்கு குவியும் பாராட்டு - குமாரபாளையத்தில் பணப்பையை எடுத்து கொடுத்த வாட்ச்மேனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஈரோட்டை சேர்ந்தவர் மகேந்திரன், 35. தனியார் மின் சாதன பொருட்கள் கடையில், பல ஊர்களில் விற்பனை செய்த பொருட்களுக்கு பணம் வசூல் செய்யும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று குமாரபாளையம் வசூலுக்கு வந்துள்ளார். பவானியிலிருந்து குமாரபாளையத்திற்கு சேலம் கோவை புறவழிச்சாலை காவிரி பாலம் வழியாக டூவீலரில் வந்துள்ளார். எஸ்.எஸ்.எம். பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, வண்டியில் மாட்டியிருந்த பணம் வசூல் செய்த பேக் தவறி விழுந்து விட்டது. இதனை அவர் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். சிறிது தூரம் சென்ற பின் கவனித்து, வண்டியில் பேக் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தான் பணியாற்றும் நிறுவனத்தார் வசம் கூற, பவானி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
எஸ்.எஸ்.எம். பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றும் ஈஸ்வர், 55, என்பவர், அவ்வழியாக சென்ற போது, வழியில் பேக் கீழே விழுந்து கிடப்பதை பார்த்துள்ளார். இதனை எடுத்து வந்து, பள்ளி நிர்வாகத்தினரிடம் சொல்ல, அவர்கள் குமாரபாளையம் போலீசில் சம்பவம் குறித்து கூறியதுடன், பேக்கை ஒப்படைத்தனர். பணப்பையை ஒப்படைத்த வாட்ச்மேன் ஈஸ்வருக்கு குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவப்படுத்தினர்.