குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கட்சி நிர்வாகிகள் தீபாராதனை காட்டி வணங்கியதுடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். 33 வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி வைத்து அந்தந்த பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், நகர பொருளர் சிவராஜ், நகர பொது செயலர் சுப்ரமணியம், மாவட்ட செயலர் கோகுல்நாத், நகர செயலர்கள் காந்தி சண்முகம், ஜனார்த்தனன் மற்றும் 33 வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.