குமாரபாளையம் நகராட்சி சார்பில் நகர்நல மையம் கட்டுமான பணி துவக்கம்
குமாரபாளையம் நகராட்சி சார்பில் நகர்நல மையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானாவால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில், 15வது மத்திய நிதி 2021,22ன் படி 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழைய காவேரி பாலம் அருகே நகர்நல மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்கு சேர்மன் விஜய்கண்ணன் பூமி பூஜை போட்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.