குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிறைவு விழா

குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிறைவு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.;

Update: 2022-06-30 14:30 GMT

குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிறைவு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிறைவு விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்கள் பணி நிறைவு விழா நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் தங்கம்மாள், ராணி, கலையரசி, மலேரியா பணியாளர்கள் வையாபுரி, மூர்த்தி ஆகியோருக்கு பணி நிறைவு ஆணை மற்றும் பணி நிறைவுக்கான வைப்புத்தொகை முதல் தவணைக்கான காசோலை ஆகியவற்றை சேர்மன் விஜய்கண்ணன் வழங்கி வாழ்த்தினார். கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், கோவிந்தராஜ், தர்மராஜன், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, நந்தினிதேவி, பூங்கொடி, சியாமளா, சுமதி, மகேஸ்வரி, புஷ்பா, தீபா, பாண்டிசெல்வி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News