குமாரபாளையம் நகராட்சி கடை ஏலம் ரத்து செய்ய தி.மு.க., அ.தி.மு.க.கோரிக்கை

குமாரபாளையத்தில் நகராட்சி கடை ஏலம் ரத்து செய்ய தி.மு.க., அ.தி.மு.க.வினர் நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-05-18 09:45 GMT

குமாரபாளையத்தில் நகராட்சி கடை ஏலம் ரத்து செய்யகோரி தி.மு.க.வினர்  கமிஷனரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில்  உள்ள ஒரு கடை அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரின் கணவருக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து அ.தி.மு.க. நகர செயலாளர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினரும், தி.மு.க. சார்பில் நகர செயலாளர் செல்வம், தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினரும் நகராட்சி கமிஷனர் விஜயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைத்து கவுன்சிலர்களுக்கும் தகவல் தராமல் ஏலம் நடத்தியதால் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நேற்றுமுன்தினம் நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட டூவீலர் மானியம் கொடுக்கும் விழாவிற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை எனவும் புகார் கூறினர். இதை கேட்ட கமிஷனர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறும்போது நகராட்சி ஒப்பந்தப்பணிகள்தான் கவுன்சிலர் குடும்பத்தினர், ரத்த உறவுகள் எடுக்க அனுமதி இல்லை. நகராட்சி கடைகள் ஏலத்தில் எடுக்க எந்த தடையும் இல்லை என்றார்.

Tags:    

Similar News