குமாரபாளையம் நகராட்சி சாலைப் பணிகள்: சேர்மன் ஆய்வு
குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் நடைபெற்ற சாலைப்பணிகளை சேர்மன் ஆய்வு செய்தார்.;
குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் நடைபெற்ற சாலைப்பணிகளை சேர்மன் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் நகராட்சி சேர்மனாக பொறுப்பேற்ற விஜய்கண்ணன் தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று கள ஆய்வு செய்து வருகிறார். அந்த பகுதியில் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
காவேரி நகர் பகுதியில் சாலைப் பணிகள் நடந்து வருகிறது. அங்கு சென்ற சேர்மன், அப்பகுதி கவுன்சிலர் கூறிய கருத்துகளை கேட்டு, ஒப்பந்ததாரர் அளவு குறைவாக சாலை அமைப்பதை அறிந்து, ஒப்பந்ததாரரிடம் பணிகளில் எவ்வித குறையும் இருக்க கூடாது என அறிவுறுத்தினார். இராஜராஜன் நகரில் சாக்கடை அடைப்பு, குப்பை அள்ளுதல் பணிகளை ஆய்வு செய்தார்.
சுகாதார சூப்பர்வைசர்களிடம் சேர்மன் விஜய்கண்ணன் கூறியதாவது:- குப்பைகள் அகற்றுவதில் எவ்வித தொய்வும், பாரபட்சமும் இருக்க கூடாது, கீழ் பணியாற்றும் யாரையும் போ, வா என ஒருமையில் பேச கூடாது, நீங்கள் பணியாட்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில்தான் அவர்கள் பணி செய்வார்கள். அவர்கள் பணியை சரியாக செய்தால்தான் மக்களிடம் எனக்கு நல்ல பெயர் வரும். இவ்வாறு சேர்மன் அறிவுறித்தினார். இதில் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், அழகேசன், சியாமளா, கிருஷ்ணவேணி உள்பட பலர் உடனிருந்தனர்.