குமாரபாளையம் நகராட்சி பூங்கா, வாரச்சந்தைகளில் சேர்மன் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சி பூங்கா, வாரச்சந்தை உள்ளிட்ட பல இடங்களில் சேர்மன் ஆய்வு செய்தார்.;

Update: 2022-03-12 13:15 GMT

குமாரபாளையம் நகராட்சி பூங்காவில் சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். நகராட்சி கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் சிலர் உடனிருந்தனர்.

குமாரபாளையம் நகராட்சி பூங்கா, வாரச்சந்தை உள்ளிட்ட பல இடங்களில் சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நகராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகள் கொட்ட 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாத குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று நகராட்சி பூங்கா, வாரச்சந்தை, சில பொது கழிப்பிடங்கள், அரசு பெண்கள் மேனிலை பள்ளி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் விடுவது, பராமரிப்பில்லாத நகராட்சி பூங்கா பராமரிப்பு செய்தல், சேதமான கழிப்பிடங்கள் புதுப்பித்தல், வாரச்சந்தையில் சீரமைப்பு பணிகள், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி கழிப்பிட சுற்றுச்சுவர் உயர்த்துதல், உள்ளிட்ட பல பணிகள் செய்திட நடவடிக்கை எடுக்க கமிஷனர் சசிகலா, பொறியாளர் ராஜேந்திரனிடம் கூறினார். இதில் கவுன்சிலர்கள் வேல்முருகன், ஜேம்ஸ், சியாமளா, கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News