குமாரபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்
குமாரபாளையத்தில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமினை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்;
குமாரபாளையத்தில் இலவச மருத்துவ முகாமினை சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.
குமாரபாளையம் 11வது வார்டு தி.மு.க., எக்ஸல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எக்ஸல் பலதுறை மருத்துவமனைகள் சார்பில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம், வார்டு கவுன்சிலர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் முகாமினை துவக்கி வைத்தார். இதில் சளி, காய்ச்சல், தொண்டைவலி, ஆஸ்துமா, மூட்டுவலி, சர்க்கரை வியாதி, மன அழுத்தம், ரத்த அழுத்தம், பித்தப்பை கற்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
துணை சேர்மன் வெங்கடேசன் 150க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆயிரத்து 500 மதிப்புள்ள மருந்துகளை இலவசமாக வழங்கினார். இதில் கவுன்சிலர்கள் அழகேசன், தர்மராஜ், செந்தில், கோவிந்தராஜ், வேல்முருகன், கதிரவன்சேகர், நிர்வாகிகள் செல்வராஜ், சரவணன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.