புதுப்பொலிவுடன் குமாரபாளையம் எம்எல்ஏ அலுவலகம்: முன்னாள் அமைச்சர் தங்கமணி திறப்பு

பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் குமாரபாளையம் எம்எல்ஏ அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.;

Update: 2021-09-12 14:30 GMT

குமாரபாளையம் எம்.எல்.ஏ., அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குமாரபாளையம்-பள்ளிபாளையம் சாலை ரிலையன்ஸ் பங்க் எதிரில் எம்.எல்.ஏ., அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் பொலிவிழந்து காணப்பட்டது. இதனை தற்போது பராமரிக்கபட்டு, பெயிண்டிங் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், புதுப்பொலிவுடன் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தின் திறப்பு விழா காலை 10:00 மணியளவில் அதிமுக நகர செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி பங்கேற்று ரிப்பன் வெட்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன் பின் குத்துவிளக்கேற்றி வைத்து, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது மாற்றுக்கட்சியினர் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிர்வாகிகள் திருநாவுக்கரசு, புருஷோத்தமன், பழனிச்சாமி, செந்தில், வெள்ளிங்கிரி உள்பட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News