அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் - குமாரபாளையம் எம்.எல்.ஏ. வழங்கினார்
குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்களை எம்.எல்.ஏ தங்கமணி வழங்கினார்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தங்கமணி கலந்து கொண்டார்.
எம்.எல்.ஏ தங்கமணி தனது சொந்த செலவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், என்95 மாஸ்க், சானிடைசர் உள்ளிட்டவற்றை, குமாரபாளையம்,பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் எலந்தகுட்டை, கொக்கராயன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம், மாவட்ட ஆட்சியர் மெகராஜ் முன்னிலையில் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர், சேர்மன் செந்தில், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர், வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, மருத்துவர்கள் வீரமணி, பாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.