பள்ளிபாளையம் அம்மா உணவக ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கிய குமாரபாளையம் எம்.எல்.ஏ
பள்ளிபாளையம் அம்மா உணவக ஊழியர்களுக்கு ₹7000 ரொக்கத்தை குமாரபாளையம் எம்.எல்.ஏ தங்கமணி வழங்கினார்.;
பள்ளிபாளையம் அம்மா உணவக ஊழியர்களுக்கு, எம்.எல்.ஏ. தங்கமணி, ₹7000 ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தமிழகம் முழுவதும் அம்மா உணவக ஊழியர்கள், தினமும் பணியாற்றி, பலருக்கு பசியாற்றி வந்துள்ளனர்.பல ஏழைகள், வருவாய் ஆதாரம் குறைந்தவர்கள், ஊரடங்கு காலத்தில், அம்மா உணவகங்களை நம்பியே இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அம்மா உணவகத்தின் பணியாளர்களை பாராட்டும் விதமாகவும், அவர்களின் பணியினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி, அம்மா உணவக பணியாளர்கள் 12, பேருக்கு, ஊக்கத்தொகையாக தலா ₹7000 வழங்கினார்.
இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.