விவேகானந்தர் பிறந்த தின விழா
குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் விவேகானந்தர் பிறந்த தின விழா, தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டது.;
விவேகானந்தர் பிறந்த தின விழா - குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் விவேகானந்தர் பிறந்த தின விழா, தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் விவேகானந்தர் பிறந்த தின விழா, தேசிய இளைஞர் நாளாக, விடியல் ஆரம்பம் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. விவேகானந்தர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கடலைமிட்டாய் வழங்கப்பட்டது. இதில் சித்ரா, ஜமுனா, ராம்கி அங்கப்பன்,சேகர், தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் மேற்கு காலனி பகுதியில் விவேகானந்தர் பிறந்த தின விழா, தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டது