அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.;

Update: 2025-01-21 14:00 GMT

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் கணேஷ் குமார் தலைமையில் குமாரபாளையத்தில் நடந்தது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் .ரமேஷ் பங்கேற்று, இளைஞர் பெருமன்றம் வரலாறு அமைப்பு விதிகள், எதிர்கால கடமைகள் பற்றி பேசினார். கூட்டத்தில் 15 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய பொறுப்பாளர்களாக மாவட்டதலைவர் மோகன், மாவட்ட செயலnளர் சாதிக், துணை தலைவர் ஜெகநாதன், துணை செயலாளர் ரஞ்சித், .பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் மோகன் பங்கேற்று, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட பேரவையை வாழ்த்தியும், புதிய பொருப்பாளர்களையும் வாழ்த்தி பேசினார். கட்சியின் முன்னாள் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவேல், கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கார்த்திகேயன், . கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய மாதர் சங்கம்.மாவட்ட செயலாளர் மீனா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் செங்கோட்டுவேல், மணிமாறன் ஆகியோர் பங்கேற்று, இன்றைய அரசியல் நிலை குறித்தும், இளைஞர்கள் எதிர்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் பேசினார்கள். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட குழு உறுப்பினர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.

படவிளக்கம் : 

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது

Tags:    

Similar News