குமாரபாளையம் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
குமாரபாளையத்தில் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
குமாரபாளையத்தில் பெருமாபாளையம் புதூர் கருப்பண்ண சுவாமி, சப்த கன்னிமார் மற்றும பரிவார மூர்த்திகள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் மேளதாளத்துடன் எடுத்து வரப்பட்டு, முதல் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், உயிர் ஊட்டுதல், மகா பூர்ணா ஹூதி,காலை 07:00 மணிக்கு கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.