குமாரபாளையம் காளியம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா
குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம், தேர்த்திருவிழா நடைபெற்றது.;
குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்
குமாரபாளையம் காளியம்மன் கோயில் மகா குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன் தினம் மகா குண்டம், பூ மிதித்தல் வைபவத்தில் ஐந்தாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற குண்டம் இறங்கினர். நேற்று காலை 08:00 மணியளவில் அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இன்று காலை 10:00 மணியளவில் தேர்த்திருவிழா துவங்கியது. பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராஜா வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, வழியாக வந்த தேர் புத்தர் வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் இங்கிருந்து வடம் பிடித்து இழுத்து சென்று காளியம்மன் கோயில் அருகே பக்தர்கள் நிலை சேர்ப்பார்கள்.
குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல் வைபவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது . நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.