குமாரபாளையத்தில் ஜன. 23ல் ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்
குமாரபாளையத்தில் 6வது ஆண்டாக வரும் ஜன. 23ல் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நல அமைப்பினர் சார்பில், ஆலோசனை கூட்டம் தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, வினோத்குமார் கூறுகையில், கொங்கு மண்டலத்தில் முதன்முதலாக ஜல்லிக்கட்டு குமாரபாளையத்தில் நடைபெற்றது பெருமைக்குரிய ஒன்று. வரும் 2022 ஜனவரி 23,ம் நாள் குமாரபாளையத்தில் ஆறாம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
இதில் மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், அமைச்சர் பெருமக்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளதாக கூறினார். இதில், நிர்வாகிகள் ராஜ்குமார், சுகுமார், விடியல் பிரகாஷ், புவனேஷ், இனியா ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.