குமாரபாளையம் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக பிரகடனம்
குமாரபாளையம் நகராட்சியை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் நகராட்சியை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கமிஷனர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலா தமது அறிக்கையில், குமாரபாளையம் நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 100 சதவீதம் 33 வார்டுகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுபற்றி தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை குமாரபாளையம் கமிஷனருக்கு எழுத்து வாயிலாக 15 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.