மாநில அளவிலான கராத்தே போட்டி; குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான கராத்தே போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டி, பாலமுருகன் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் குமாரபாளையம் கிரேட் இந்தியன் கராத்தே பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளர் பன்னீர்செல்வம் தலைமையில், குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு வயது பிரிவின் அடிப்படையில் நடந்த போட்டிகளில் கட்டா பிரிவில் பரணிவேலன் முதலிடமும், ஹரிஹரன் இரண்டாமிடமும், பரத்குமார், தேவி, நிகாசாய்நிதிஷ், விகாஸ் தவனித் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்தனர்.