குமாரபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
News Awards - குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.;
News Awards -சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது எனும் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகள் வழங்கி ஆசிரியர்களை கவுரப்படுத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டு நாமக்கல் மாவட்ட அளவில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் குமாரபாளையம் பகுதி, தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட அருவங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க. வெற்றிவேலிற்கு தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு முன்னிலையில் பட்டிமன்ற பேச்சாளர், தி.மு.க. நிர்வாகி லியோனி கையால் விருது பெற்றார். இவரை முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டினார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2