குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ் துவக்கி வைத்தார். நில நடுக்கம் முன் கூட்டியே அறியும் கருவி, சிக்கனமான விவசாய நீர் பாசனம், ஆம்புலன்ஸ்க்கு வழிவிடும் தானியங்கி வேகத்தடை, மின் சிக்கனத்திற்கு தானியங்கி மின் கம்பம், விபத்தை தவிர்க்க தானியங்கி எச்சரிக்கை விளக்கு போன்ற 50க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறந்த படைப்புகளுக்கு பி.டி.ஏ நிர்வாகிகள் சுரேந்தர், விஜயன், ராஜேந்திரன் உள்பட பலர் பரிசுகள் வழங்கினர்.