குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதுநிலை மாணவர்களுக்கு கலந்தாய்வு

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

Update: 2021-09-09 12:15 GMT

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி ( பைல் படம்)

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இது பற்றி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரகுபதி (பொ) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 - 2022 கல்வியாண்டிற்கு எம்.ஏ.தமிழ், ஆங்கிலம், எம்..காம்., எம்.எஸ்.சி. கணிதம், எம்.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய முது நிலை பாட வகுப்புகளுக்கான மாணவர் கலந்தாய்வு செப். 13ல் காலை 09:30 மணியளவில் சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கும், அதைத் தொடர்ந்து பிற மாணாக்கர்களுக்கும் நடைபெறவுள்ளது.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களுக்கான தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணைய தளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடபட்டுள்ளது.

இணைய வழியில் பதிவு செய்த மாணாக்கர்கள் செப்.13ல் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகைதந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணாக்கர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இளநிலை பாடப்பிரிவுகளான

பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் 25 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கையானது பெரியார் பல்கலைக்கழக விதிகளுக்குட்பட்டு நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை கல்லூரியில் நேரடியாக பெற்று சேர்க்கை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News