குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா
குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
சர்.சி.வி. ராமன் அவர்களின் ராமன் விளைவு எனும் அறிவியல் கருத்தாக்கங்களின் வெளியீட்டு நாளாகிய பிப். 28 இந்திய அளவில் தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று குமாரபாளையம் அரசு பி.எட்., கல்லூரியில் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக சேலம் அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியை ரூமானா பங்கேற்று, அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து, நீடித்த வளர்ச்சிக்கு அறிவியல் தொழில் நுட்பங்களின் பங்கு, என்ற தலைப்பில் உரையாற்றினார். அறிவியல் நாட்காட்டியை முதல்வர் வெளியிட சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொண்டார். மாணவ, மாணவியர் பங்கேற்ற அறிவியல் வினாடி, வினா நிகழ்ச்சியை கல்லூரி பேராசிரியர்கள் சின்னப்பராஜ், தங்கவேல் நடத்தினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். உயிர் அறிவயல் துறை வைரமணி நன்றி கூறினார்.